1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Andhra one day corona virus affect details

ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Andhra corona
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
 
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,515 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 903  என்றும் ஆந்திர அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,050 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,788 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,80,407 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?