1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India decreases

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,451 பேருக்கு கொரோனா - இந்திய நிலவரம்!

கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,451 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,02,194 ஆக உயர்ந்தது. புதிதாக 40 பேர் இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,064  ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,079 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,57,495-ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,635 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,90,20,07,487 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 17,39,403 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash