இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி?
இந்தியாவில் 47 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி என உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,98,743 ஆக உயர்ந்தது. புதிதாக 22 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,024 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,168 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,54,416 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,303 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 47 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், இது மத்திய அரசு அறிவித்துள்ளதை விட 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும் இந்த கணக்கு தவறானது என மத்திய அரசு மறுத்துள்ளது.