ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 7 மே 2022 (17:07 IST)

செங்கல்பட்டு, மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

corona
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானது
 
ஏற்கனவே செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரசால் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மொத்த பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார் 
 
இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன