1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India decreases

ஒரே நாளில் 7,081 பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,081 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,40,275 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 264 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,77,422 ஆக உயர்ந்தது. அதோடு தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,469 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,78,940ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83,913 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,37,46,13,252 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,54,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒமிக்ரான் எதிரொலி: நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு!