1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona cases across the world increases

27.45 கோடியாக அதிகரித்த பாதிப்பு: உலக நிலவரம்!

கொரோனா
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27.45 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
ஆம், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27.45 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.63 கோடியைத் தாண்டியது.
 
மேலும் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 2.28 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்
89 நாடுகளில் ஒமிக்ரான் - இரட்டிப்பு வேகத்தில் பரவும் சோகம்!