4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: இந்தியாவின் நிலை இதுதான்!
நான்கு நாட்களில் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 8 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,136 ஆக உள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 23 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 22,123 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386 ஆக உயர்ந்துள்ளது.