1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases cross in india again increased

2.17 லட்சம் தினசரி பாதிப்புகள்; 1,185 பேர் பலி! – இந்தியாவை மிரட்டும் கொரோனா!

India
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,42,91,917 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,74,308 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,25,47,866 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,69,743 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! – ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்!