திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (09:00 IST)

இன்னும் ஒரு விக்கெட்தான்… அஸ்வின் படைக்கப் போகும் சாதனை!

இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் டி 20 போட்டிகளில் மொத்தமாக 250 விக்கெட்களை எடுக்க இன்னும் ஒரு விக்கெட்தான் தேவை.

இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. ஐபிஎல் போன்ற டி 20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் ஒட்டுமொத்தமாக டி 20 போட்டிகளில் 250  விக்கெட்களை சேர்க்க இன்னும் ஒரே ஒரு விக்கெட்தான் தேவை. நேற்றைய போட்டியில் அவர் விக்கெட் எதுவும் எடுக்காததால் அடுத்து வரும் போட்டியில் அந்த சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.