1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona case in India increased 43

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…

கொரோனா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்முவில் ஒருவருக்கும், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கும், டெல்லியில் மூன்றாவதாக ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் இத்தாலியில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலிய பயணிகள் 16 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேர் குணமடைந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
Yes Bank விவகாரம்: ராணா கபூர் குடும்பத்திற்கு சிபிஐ லுக் அவுட்