Daily Horoscope
✕

50 ஆயிரத்திற்கு கீழ் வந்த தினசரி கொரோனா பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 26 ஜூன் 2021 (10:17 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,01,83,143 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 1,183 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,94,493 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,95,565 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் இதுவரை 31,50,45,926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments