திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By மகேந்திரன்
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (08:41 IST)

தனுஷ் & கார்த்திக் நரேன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அப்டேட்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D 43 படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி நடந்தன.

ஆனால் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக மூன்று மாதம் அமெரிக்காவில் முகாமிட்டார். அதை முடித்துவிட்டு இப்போது இந்தியாவுக்கு வந்துள்ள அவர் கார்த்திக் நரேன் படத்தை முதலில் முடிக்க உள்ளார். இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.