வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (14:11 IST)

கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன: காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு..

congress
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அனைத்து 42 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் திரிணாமுல் கட்சிக்காக கூட்டணிக்கான கதவுகள் இன்னும் திறந்த இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
இந்தியா கூட்டணி உருவாக மேற்கொண்டு முதல்வர் மம்தா பானர்ஜி முக்கிய காரணம் என்றும் பாஜகவை தோற்கடிப்பதற்கு அவர் முன்னுரிமை கொடுத்து வருகிறார் என்றும் எனவே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மேற்குவங்கத்தில் அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கூட்டணிக்கான கதவுகளை நாங்கள் மூடவில்லை, 42 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஒருதலைபட்சமாக மம்தா பானர்ஜி தான் அறிவித்திருக்கிறார், ஆனால் அதே நேரத்தில் இன்னும் பேச்சு வார்த்தைகள் தொடர்கின்றன, கூட்டணி கதவுகள் இன்னும் திறந்து உள்ளன என்று அவர் தெரிவித்தார் 
 
தமிழகத்தில் அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கிறது என பாஜக கூறிய நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்காக கூட்டணி கதவுகள் திறந்து உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva