அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு ஜூலை 10-ம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இருப்பினும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸின்படி
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது முறையாக விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகிறார் என்பது குறிபிடத்தக்கது. ஏற்கனவே இதே வழக்கிற்காக கடந்த 5ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் இன்றும் அதேபோல் மாலை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
P.Chidambarm