திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜூன் 2018 (18:48 IST)

விபத்தில் சிக்கி கேட்பாரற்று உயிருக்கு போராடிய பிரபல நடிகை

பிரபல கேரள நடிகை கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரமாய் யாரும் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த நடிகை கேகா மேத்யூ ஒரு மெக்ஸிகன் கதை, தியான் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர்.
 
இந்நிலையில் மேகா, தனது அண்ணனின் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்க, கொச்சியிலிருந்து கோட்டயத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எர்ணாகுளம் அருகே சென்ற இவரது கார் எதிரே வந்த கார் மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்தது. மோதிய காரும் நிற்காமல் சென்றுவிட்டது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் யாரும் விபத்தில் அடிப்பட்டவரை காப்பாற்ற முன்வரவில்லை. காரை புகைப்படம் எடுப்பதிலும், செல்பி எடுப்பதிலுமாய் அங்கிருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒரு மணிநேரம் கழித்து அங்கு வந்த பிரஸ் ரிப்போட்டர் ஒருவர், விபத்தில் சிக்கிய நடிகையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். காரில் ஏர் பேக் இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் மேகா.