வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மார்ச் 2023 (12:12 IST)

ஜாமினில் விடுதலையானவுடன் மொட்டை: முதல்வருக்கு எதிராக சபதம் எடுத்த காங்கிரஸ் பிரமுகர்..!

kousatav
ஜாமினில் விடுதலையானவுடன் மொட்டை: முதல்வருக்கு எதிராக சபதம் எடுத்த காங்கிரஸ் பிரமுகர்..!
 ஜாமினில் விடுதலையானவுடன் மொட்டை எடுத்துக் கொண்ட பிரபல காங்கிரஸ் பிரமுகர் முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் வரை முடி வளர்க்க மாட்டேன் என சபதம் எடுத்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் கவுஸ்டாவ் பாக்ஸி என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அவர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்த நிலையில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் பாக்சி ஜாமினில் விடுதலை ஆனவுடன் அவர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டார். 
 
மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கும் வரை என் தலை முடியை வளர்க்க மாட்டேன் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார். இந்த சபதம் மேற்குவங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
Edited by Siva