திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (14:10 IST)

33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற காங்கிரஸ்!

congress
33 ஆண்டுகளுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அக் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் வலுவாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றான கஸ்பா பெத் என்ற சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்ட நிலையில்  அவரது வெற்றியை கேள்விக்குறியாக இருந்த நிலையில் ஆச்சரியமாக அவர் முன்னிலையில் இருந்து வருகிறார் என்றும் சற்றுமுன் அவர் வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த தொகுதியில் 1991 ஆம் ஆண்டில் தான் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றிருந்தது. அதனை அடுத்து தற்போது 33 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பதும் 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த ஆறு தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி நான்கு மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது அடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் எழுச்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran