1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:19 IST)

மூன்று மாநிலங்களில் முன்னிலையில் காங்கிரஸ் –தேர்தல் முடிவு அப்டேட்

ராஜ்ஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சண்டிகார் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் ஆளும் பாஜகவை விட காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ராஜ்ஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டிகார், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் கடந்த ஒரு மாதமாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. அந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளதால் இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என அரசியல் வல்லுநர்கள் ஆருடம் கூறினர்.  அதற்கேற்றார் போலவே ராகுல்காந்தி முதல் மோடி வரை அனைத்து தேசியத் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பில் ராஜஸ்தான், சண்டிகாரில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால் இன்றையத் தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பிற்கு முற்றிலும் மாறாகவே இருக்கின்றன. அந்த 3 மாநிலத்திலும் காங்கிரஸே முன்னிலை வகித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும் பாஜக காங்கிரஸை நெருங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு நிலவி வருகிறது.

எனவே இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிப்பெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.