வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (13:48 IST)

மாஸ்க் மட்டுமல்ல விற்பனையில் சாதனை செய்தது ஆணுறையும்

கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்று இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் இருப்பவர்களுக்கு எவ்வளவு நேரம்தான் டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருப்பார்கள். இதனை அடுத்து திடீரென மெடிக்கல் கடைகளில் குவிந்த பொதுமக்கள் ஆணுறைகளை ஏராளமாக வாங்கி சென்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
கொரோனா வைரஸை தடுப்பதற்காக மாஸ்க்குகள், கையுறைகள், சானிடைசர்களை அதிகம் பொது மக்கள் வாங்குவார்கள் என்று நினைத்திருந்த மருந்து கடைக்காரர்களுக்கு அதிக அளவில் ஆணுறைகள் விற்பனையானது அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிக அளவிலான ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வாங்கி சென்றதாக மருந்து கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர் 
 
21 நாட்கள் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு இதுவும் ஒரு பொழுது போக்கு தான் என்ற வகையில் ஆணுறைகள் அதிகம் விற்பனையாகி வருவதாக தெரிகிறது