செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (13:23 IST)

ஏப்ரல் 9ல் ரிசப்ஷன் நடத்தினால் போல்தான்: யோகிபாபு புலம்பல்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு அவர்கள் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த திருமணம் திடீரென முடிவு செய்யப்பட்ட திருமணம் என்றும் அதனால் திரையுலகினரை அழைக்காமல் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைத்து திருமணத்தை முடித்துக் கொண்டதாகவும் யோகிபாபு விளக்கம் அளித்திருந்தார் 
 
இருப்பினும் அனைத்து தரப்பினரையும் அழைத்து பிரமாண்டமாக திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 9ஆம் தேதி திருமண ரிசப்ஷன் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழையும் அவர் முக்கிய பிரமுகர்களும் நேரில் சென்று கொடுத்து வந்தார்
 
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கேப்டன் விஜயகாந்த் உள்பட பலருக்கு அவர் நேரில் சென்று அழைப்பிதழை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
இதுகுறித்து யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஏப்ரல் 9ம் தேதி திட்டமிடப்பட்ட திருமண வரவேற்பு நடத்த முடியாது போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு டிவிட்டர் பயனாளிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்