1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:42 IST)

வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு- பிரதமர் மோடி அறிவிப்பு

வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

இமாச்சல் பிரதேச மாநிலம் உனா  மாவட்டத்தில் உள்ளா தஹ்லிவால் என்ற பகுதியில் பத்ரி கிராமம் அருகில் குர்பாலாவில் ஒரு பட்டாசு தொழிற்சாலை இயங்கிவருகிறது.

இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.  12 பேர் படுகாயம் அடைந்த  நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

வெடிவிபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், பிரதமரின் தேசிய  நிவாரண நிதியில் இருந்து வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000  வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.