வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (11:06 IST)

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை: காதல் தோல்வியா?

suicide
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் காதல் தோல்வியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
 
பெங்களூரை சேர்ந்த 23 வயது வாணி என்பவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் திடீரென அவர் கல்லூரிக்கு சில நாட்கள் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது 
 
மேலும் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறிய நிலையில் நேற்று திடீரென கல்லூரி வளாகத்தில் 6-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கி உள்ளதாகவும் அது குறித்து விசாரணை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva