திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (16:59 IST)

ஆன்லைன் ரம்மியால் ரூ.1 கோடி இழந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் !

Rummy
ராசிபுரம் அருகில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.1 கோடி இழந்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளைய என்ற பகுதியில் வசித்து வருபவர் விஜய்(33). இவர் பிகாம் படித்துள்ள நிலையில்,தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த விஜய், இதில், ரூ. 1 கோடி இழந்துள்ளார்.

பணத்தை இழந்த வேதனையில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்று  நேற்று முன் தினம் ஒரு வீடியோவை தன் நண்பர்களுக்கு தன் மரணம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர், அவரது நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj