1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. cockroach party declare protest if gnaneshkumar not resinged

ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும்!.. போராட்டத்தை முன்னெடுக்கும் கரப்பான் பூச்சி இயக்கம்!...

cockroach
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இளைஞர்களால் துவங்கப்பட்ட அரசியல் இயக்கம்தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. இந்த கட்சியை அபிஜித் தீப்கே என்பவர் துவங்கினார். இந்த கட்சியின் பெயரை அறிவித்து இந்த கட்சியின் பெயரோடு ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அவர் கணக்கை துவங்கிய போது பல லட்சம் பேர் அந்த பக்கத்தை பின் தொடர்ந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு அந்த சமூக வலைதள பக்கங்களை முடக்கியது..

ஆனாலும், இளைஞர்களை முடக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி இயக்கம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தை முன்னெடுத்தது..

அந்த கூட்டத்தில் பல லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். டெல்லி போலீசாராடு இணைந்து மாணவர்களை ஒடுக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்தும் அது நடக்கவில்லை. இறுதியில் மத்திய அரசு பணிந்து.. தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்
. தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி கோரிக்கை வைத்திருக்கிறது...

SIR என்கிற பெயரில் பல முறைகேடுகள் நடந்து, பல வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். குறிப்பாக மத்திய அரசுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்கள் முக ஸ்டாலின், மமிதா பேனர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டிருப்பதன் பின்னணில் SIR இருக்கலாம் என அவர் கூறியிருக்கிறார்.

அக்டோபர் 1ம் தேதிக்குள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 2ம் தேதி மும்பையில் தேசிய அளவிலான போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே  அறிவித்திருக்கிறார். எதிரிகளை வீழ்த்த நினைக்கும் பாஜக அரசுக்கு தலைமை தேர்தல் ஞானேஷ்குமார் துணை போவதாக அபிஜித் தீப்கே கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நகை, பணத்துடன் ரீல்ஸ் போட்ட பெண்... 118 பவுன் நகையை அபேஸ் செய்த திருடன்