வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (12:27 IST)

ஹரியானாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.! முதலமைச்சர் கட்டார் ராஜினாமா..!!

Kattar
மக்களவைத் தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  ஹரியானாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. முதலமைச்சர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார்  இருந்து வந்தார். ஹரியானாவில் பாஜக,  ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
 
இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. 

 
இதனால் பாஜக - ஜேஜேபி இடையிலான கூட்டணி முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி உள்ளதால் ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.