காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ சுட்டுக்கொலை.. முன்பகை தான் காரணமா?
ஹரியானா மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான நஃபே சிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நஃபே சிங் உயிரிழந்ததாகவும் தெரிகிறது
அது மட்டும் இன்றி மேலும் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் முன்பகை காரணமாக நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் முன்னாள் எம்எல்ஏ பலியாகி இருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva