1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:05 IST)

தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தமிழகத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டுமென பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்
 
தமிழ்நாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை தந்த பிரதமர் அவர்களுக்கு நன்றி என்றும் எனினும் தடுப்பூசி அதிகம் பொதுமக்களுக்கு போட்டபோதிலும், தேசிய சராசரியை விட தமிழ்நாடு குறைவாகவே உள்ளது என்றும் எனவே தமிழ்நாட்டுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார் 
 
அக்டோபர் 31ம் தேதிக்குள் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறும் அப்போதுதான் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கு முடிவுக்கு வரும் என்றும் கூறினார் 
 
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில் இந்த 50 லட்சம் தடுப்பூசிகளை பயன்படுத்தப் போவதாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். முதல்வரின் கடிதத்தை அடுத்து விரைவில் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது