தடுப்பூசி போட்டுக்கிட்டா இலவச வீட்டு மனை! – பவானியில் குவியும் கூட்டம்!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் வீட்டு மனை வழங்குவதாக அறிவித்ததால் பவானியில் தடுப்பூசி போட பலர் ஆர்வம் காட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் 12ம் தேதியன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. காலை 11 மணி நிலவரப்படி 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வாரம் போலவே பல முகாம்களில் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய பல்வேறு பரிசு அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.