1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (10:11 IST)

பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து !

பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து !
பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மானுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றதை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் அம்மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் 
 
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் பகவந்த் மானுக்குதமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
மொழி உரிமை மற்றும் மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுத்த நீண்ட வரலாறு தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு உண்டு என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்