திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூலை 2023 (12:11 IST)

கேரளாவில் கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளி: 24 மணி நேரமாகியும் மீட்க முடியாத நிலை..!

கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை மீட்க முடியாத அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோலா பகுதியில் கிணற்றுக்குள் சிக்கிய தொழிலாளியை மீட்க மண்ணை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட போது மேலும் மண் சரிவதால் மீட்பு பணிவில் தொய்வுஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
100 அடி ஆழமுள்ள கிணற்றில் 90 அடிக்கு மேல் மண் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீட்புப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
திருவனந்தபுரம் மாவட்டம் முக்கோலா பகுதியில் கிணறு தூர்வாரும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டு அதில் தமிழக தொழிலாளி சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva