வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (17:28 IST)

விவசாயிகள் பெயரை மட்டும்தான் வெளியிடுவீர்களா? ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெற்றவர்கள்? மத்திய தகவல் ஆணையம் கேள்வி

சிறிய அலவில் கடன் பெறும் விவசாயிகள் வெளியிடும் அரசு, ரூ.50 கோடிக்கும் மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாவர்களின் பெயரையும் வெளியிட வேண்டும் என்று மத்திய தவகல் ஆணையம் மத்திய அரசை கடுமையாக விளாசியுள்ளது.

 
விவசாயிகள் சிறிய அளவிலான தொகையை கடனாக பெற்று திரும்ப செலுத்தாத போது அவர்கள் பெயரை பொதுத்தளத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் ரூ50 கோடிக்கு மேல் கடன் பெற்று வேண்டுமென்றே திரும்ப செலுத்தாதவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
 
வங்கிகளில் ரூ.50 கோடிக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பொதுமக்கள் மத்தியில் வெளியிடுங்கள் என்று நிதி அமைச்சகம், மத்திய புள்ளியல்துறை மற்றும் திட்ட அமலாக்கம், பாரத ரிசர்வ் வங்கி ஆகியவைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்த உத்தரவில், கடன் பிரச்சனையால் உயிரைவிடும் விவசாயிகள் பணக்காரர்களை போல் நாட்டை விட்டு ஓடவில்லை. மெத்தப்படித்த தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கியில் கடன் பெற்று திரும்பி செலுத்தாமல் நாட்டை ஏமாற்றி வருகிறார்கள் என கடுமையாக விளாசியுள்ளது.
 
மேலும், பொதுமக்களின் பணத்தையும், நட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பது கடமையாகும் என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.