திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (19:40 IST)

என்னை நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரிந்துவிடும்: டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், தன்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என்று கூறியுள்ளார்.

 
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது நடிகைகள் உள்பட 2 பெண்கள் பாலியல் புகார் செய்தனர். அவர்களுக்கு பணம் கொடுத்து வாயை மூடியதாக புகார் எழுந்தது.
 
இதுதொடர்பான வழக்கில் டிரம்ப் உதவியாளர் கோஹன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய டிரம்ப் கூறியதாவது:-
 
பணம் கொடுத்தது உண்மைதான். ஆனால் அதை தேர்தல் பிரசாரத்திற்கான பணத்தில் இருந்து கொடுக்கவில்லை. என் சொந்த பணத்தில் இருந்துதான் கொடுத்தேன். என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என்று கூறியுள்ளார்.