வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (08:11 IST)

வந்தே பாரத் ரயிலில் வழங்கும் உணவு படுமோசம்… நடிகர் பார்த்திபன் புகார்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் கடந்த ஆண்டு இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள டீன்ஸ் என்ற படம்  ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 படத்தோடு ரிலீஸ் ஆனது.

அதனால் முதல் நாளில் இந்த படத்துக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் இந்த படத்துக்கு கொஞ்சம் ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது. ஆனாலும் பெரிய அளவில் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. தற்போது ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தற்போது அடுத்த படத்துக்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த அவர் அதில் வழங்கப்படும் உணவு படுமோசமாக இருந்ததாக புகாரை அளித்துள்ளார். அவரது புகாரில் “ உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரயிலும் சுத்தமாக இருந்தது. இரவு வழங்கப்பட்ட உணவும் சிக்கனும் படுமோசம். உணவுக்காக பெருந்தொகைப் பெற்றுக் கொண்டு இப்படு பரிமாறுவது முறையற்றது. ஆரோக்கியம் அவசியம்” என எழுதியுள்ளார்.

மேலும் அந்த புகார் கடிதத்தை புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து “முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை .பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.  நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…” எனப் பதிவு செய்துள்ளார்.