1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (08:18 IST)

இயக்குனர் சிவாவின் தம்பி பாலா கைது… முன்னாள் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை!

தமிழில் அன்பு படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவரின் அண்ணன்தான் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சிறுத்தை சிவா. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பாலா அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இடையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் தேறி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன்னாள் மனைவி அம்ருதா அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். விவாகரத்து விதிகளை மீறி பாலா தன்னையும் தன் மகளையும் பின் தொடர்ந்து தொல்லை தருவதாக அம்ருதா புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் பாலாவின் மகள் அவந்திகா “என் தந்தையை நேசிக்க அவரிடம் சின்ன காரணம் கூட இல்லை. அவர் எங்களை குடித்துவிட்டு வந்து தாக்கியதுதான் நினைவுக்கு வருகிறது. எங்களை தொடர்ந்து ஐந்து நாட்கள் பட்டினி போட்டார்.” எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த பாலா “மகளே உன்னிடம் விவாதம் செய்தால் வெல்லலாம். ஆனால் நீ ஜெயிக்க வேண்டும் என்பதற்காக உன்னிடம் சரணடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.