வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:53 IST)

சீனாவில் இருந்து வந்த கிட்கள் தரமற்றவையா? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

சீனாவில் இந்தியாவுக்கு வந்து மருத்துவ உபகரணங்கள் தரம் குறைந்தவை என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வெறும் 30 நிமிடத்தில் கன்டறியப் பயன்படும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு சீனாவில் ஆர்டர் செய்திருந்தது. ஆனால் மத்திய அரசோ தாங்களே மொத்தமாக உபகரணங்களை வாங்கி மாநில அரசுக்கு பகிர்ந்தளிப்போம் என அறிவித்தது. இதையடுத்து நேற்று மொத்தமாக 1.7 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன.

அவற்றை சோதனை செய்ததில் 50000 பிபிஇ (personal productive equipment) தரநிர்ணய அளவை எட்டவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பிபிஇ தடுப்புக் கவசங்கள் அனைத்தும் சீனாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்றும். நாம் வாங்கியவை என்றும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்துப் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் கிட்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை மே மாதம் முதல்வாரம் இந்தியா வந்து சேரும் என சொல்லப்படுகிறது.