திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (15:25 IST)

என்னைக் கட்டிபோட்டு மின்சாரம் பாய்ச்சினர்… அருணாசல பிரதேச இளைஞர் கூறிய அதிர்ச்சி தகவல்!

சீன ராணுவத்தால் கடத்தப்பட்ட அருணாசால மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் 9 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த மிரம் டேரோன் என்ற 17 வயது இளைஞர் கடந்த மாதம் 18 ஆம் தேதி சீன ராணுவத்தால் கடத்தப்பட்டார்.

பின்னர் 9 நாட்கள் கழித்து ஜனவரி 27 ஆம் தேதி சீன ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் சீன ராணுவம் தன்னை சித்திரவதை செய்ததாகவும், தன் மீது மின்சாரம் பாய்ச்சியதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதில் ‘என் கண்களைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். முதல் நாள் என்னை சித்திரவதை செய்து என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினர். ஆனால் அதற்கடுத்த நாட்களில் இருந்து எந்த கொடுமையும் செய்யவில்லை’ எனக் கூறியுள்ளார்.