1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 2 பிப்ரவரி 2022 (10:41 IST)

எனக்கு 3 குழந்தைகள்… அதனால் நிறைய அறைகள் உள்ள வீடுவேண்டும் –ஏபிடி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் டிவில்லியர்ஸ்.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளுள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இருந்தும் அந்த அணியில் விளையாடிய கெய்ல் மற்றும் டிவில்லியர்ஸ் போன்றவர்களுக்கு மற்ற அணிகளில் கூட ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டார். இந்நிலையில் ஆர் சி பி நடத்திய ஒரு ஆடியோ போட்காஸ்ட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது நெறியாளர் ‘உங்களுக்கு ஆர் சி பி ரசிகர்கள் ஒரு அபார்ட்மெண்ட்டை பெங்களூருவில் தருவதாக கூறினார்கள். மேலும் உங்களை இங்கேயே வந்துவிட சொல்கிறார்கள். இந்த அணியோடும் நகரத்தோடும் உங்களது பிணைப்பு எவ்வாறு இருந்தது?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஏ பி டிவில்லியர்ஸ் ‘எனக்கு 3 குழந்தைகள் உள்ளதால் நிறைய அறைகள் உள்ள வீடு வேண்டும். எனக்கும் ஆர் சி பிக்கும் ஆழமான பிணைப்பு இருந்தது. மற்ற அணிகளுக்காக அந்த பிணைப்பு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆர் சி பி ரசிகர்கள் மற்றும் இந்த நகரத்தோடு எனக்கு தனித்த பிணைப்பு உண்டு’ எனக் கூறியுள்ளார்.