புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (16:51 IST)

5 சிறுவர்களுக்கு கமிஷ்னர் பதவி.. காரணம் என்ன??

பெங்களூரில் 5 சிறுவர்களுக்கு ஒரு நாள் கமிஷ்னர் பதவி கொடுக்கப்படுள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

”மேக் எ விஷ்” என்ற தொண்டு நிறுவனம், பெங்களூரில் உள்ள 5 சிறார்களுக்கு ஒரு நாள் மட்டும் பெங்களூர் கமிஷனராக இருக்க ஏற்பாடு செய்தது. அந்த 5 சிறார்களும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவர்கள். ”மேக் எ விஷ்” தொண்டு நிறுவனத்திற்கு, இந்த சிறார்களை போல் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நிறைவேறாத ஆசையுடன் தனது நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு, அந்த ஆசையை நிறைவேற்றி வைப்பது தான் முக்கிய நோக்கமே.

இந்த 5 சிறார்களுக்கு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், போலீஸ் சீருடையை அணிவித்து, பெங்களூரில் உள்ள தலைமை போலீஸ் அலுவலகத்தில் உள்ள தனது நாற்காலியில் உட்காரவைத்தார்.

இந்த 5 சிறுவர்களில், 11 வயதான் முஹம்மது சாகிப் என்ற சிறுவனுக்கு ரத்த புற்று நோய். 8 வயது சிறுவனான ருட்டன் குமாருக்கு சிறுநீரகத்தில் ஒன்று செயலிழந்தது.ஷிரனானி பட்டாலா என்ற 8 வயது சிறுவனுக்கு தலசெமியா நோயும், அர்ஷத் பாஷா என்ற 8 வயது சிறுவனுக்கு கொடிய உயிர்கொல்லி நோயும் உள்ளது. 4 வயது சிறுவனான சையத் இமாமுக்கு ரத்த அழுத்தம் மற்றும் கொடிய தொற்று நோய் உள்ளது.

இது குறித்து போலீஸ் கமிஷ்னர் பாஸ்கர் ராவ் கூறுகையில், ”குழந்தைகள் அனைவருக்கும் தீவிர நோய் இருப்பதால், இவர்களின் பெற்றோரை ஒரு நாளாவது மகிழ்விக்க விரும்பினேன்” என நெகிழ்ச்சியாக கூறுகிறார். இச்செய்தி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.