புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:52 IST)

ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ஸொமாட்டோ! – வேலையிழப்பு அதிகரிக்க போகிறதா?

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ தனது ஊழியர்களில் பலரை வேலையிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோ நாளோன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தனது ஊழியர்களில் 500க்கும் மேற்பட்டோரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.

”நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் வாடிக்கையளர்களை குறைகளை கேட்டறிய, நிர்வகிக்க ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். ஆனால் தற்போது தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துவிட்டதால் ஆட்கள் அதிகம் தேவைப்படவில்லை. மேலும் வாடிக்கையாளர்கள் புகார்கள் தற்போது வெகுவாக குறைந்துவிட்டன. அதனால் வேலையில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என ஸொமாட்டோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதை தொடர்ந்து மேலும் சில உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் சிலரை வேலையை விட்டு நீக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.