திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (17:58 IST)

'ஜெயிலர்' படம் பார்க்க வராத முதல்வர் யோகி ஆதித்யநாத்

Jailer
ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து 'ஜெயிலர்' படம் பார்ப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று படம் பார்க்க வரவில்லை.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். இப்படம் மிகப்பெரிய எதிர்பபார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.  ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியான  நிலையில் ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டனர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் வடஇந்தியாவில் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலை நடிகர் ரஜினிகந்த் மரியாதை நிமித்தமான சந்தித்தார்.

ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து 'ஜெயிலர்' படம் பார்ப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று படம் பார்க்க வரவில்லை.
 
rajini -Deputy cm

அவருக்குப் பதிலாக உ.பி., துணைமுதல்வர் கேஷ்வ் பிரசாத் மவுரியா வருகை புரிந்த நிலையில், படம் பார்க்கும்போது, பாதியிலேயே அலுவல் நிமித்தமாக அவரும் கிளம்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும், ஆன்மிக பயணத்தில் நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.