1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (07:25 IST)

இன்று முதல்வரோடு இணைந்து ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்கும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரிசையாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது ஜெயிலர்.

இந்த படம் இதுவரை 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் கேரியரில் 2.0 படத்துக்கு பிறகு அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் பட ரிலீஸுக்கு முன்பாக இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தற்போது லக்னோவில் முகாமிட்டுள்ளார்.

இன்று அவர் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கிறார். அந்த சந்திப்பு குறித்து விமான நிலையத்தில் பேசிய அவர் “முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்க உள்ளேன்.” எனக் கூறியிருந்தார்.