திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (18:25 IST)

உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர் பசுவராஜ்

உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருடன் பேசிய முதல்வர் பசுவராஜ் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 6 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை இருதரப்பினிலும் ஆயிரக்கணக்கான ராணுவவீரர்களும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

இ ந் நிலையில், உக்ரைனில் வசித்து வந்த கர் நாடகாவைச் சேர்ந்த மாணவர் நவீன், இன்று ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை உறுதிசெய்துள்ளது.

இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, மாணவனின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார்.

அதேபோல், கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை,  உயிரிழந்த ந நவீன் சேகரப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.