புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (12:24 IST)

இந்திய எல்லையில் அத்துமீறியப் பாகிஸ்தான் விமானம் – சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதனை இந்திய ராணுவ விமானங்கள் விரட்டியடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இந்திய ராணுவத்தினர் மீது ஜெய்ஷ் இ முகமது எனும் பயங்கரவாத அமைப்புத் தாக்குதல் நடத்தியது. அதில் 45 சிஆர்பிஎஃப் வீரர்ர்க்ள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இந்திய சரியானப் பதிலடிக் கொடுக்க வேண்டும் நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன.

தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. பாலகோட் எனும் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் வீசியது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரைக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதிகளின் முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாகவும் இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பதிலடிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே இந்திய எல்லைக்குள் இன்று அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் குண்டுகளை போட முயன்றதாகவும் அதனை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விமானப்படை விமானங்கள் தடுத்து அந்த விமானங்களை விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த விமானங்கள் தாக்குதல் நடத்திய இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. இந்திய விமானப்படைகளால் தாக்கப்பட்ட எஃப் 16 வகை விமானத்தில் இருந்த விமானி பாராஷூட் மூலம் கீழே குதித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது. அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நம்பப்படுகிறது.