ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (11:18 IST)

குழந்தையுடன் சேர்ந்து கொசுவலைக்குள் படுத்துத் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி

மகாராஷ்டிராவில் சிறுத்தைப்புலி குட்டி இன்று குழந்தையின் கொசுவலைக்குள் புகுந்து, குழந்தையோடு சேர்ந்து படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா மாநில நாசிக் மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில் மனிஷா ஜாதவ் என்பவர் தனது வீட்டில் தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலை விரித்து அதற்குள் தூங்கவைத்தார். பின்னர் அவரும் தூங்க சென்றுவிட்டார்.
 
பின் காலையில் எழுந்து பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த கொசுவலையில் தனது குழந்தைகளோடு, ஒரு சிறுத்தைப்புலி குட்டியும் தூங்கிக் கொண்டிருந்தது. பதற்றப்படாமல் அவர் பொறுமையாக தனது இரண்டு குழந்தைகளையும் கொசுவலையில் இருந்து வெளியே மீட்டார்.
 
பின் இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் வந்து சிறுத்தைப்புலி குட்டியை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.