1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (11:51 IST)

ஒரு லிட்டர் கோமியம் ரூ.4 மட்டுமே..! – கொள்முதல் செய்யும் சத்தீஸ்கர் அரசு!

komiyam
சத்தீஸ்கரில் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோமியத்தை கொள்முதல் செய்வதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

வட மாநிலங்கள் பலவற்றில் பசு மாட்டின் கோமியம் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. பல பகுதிகளில் பசு கோமியம் சிறிய டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுவதும் நடக்கிறது. சத்தீஸ்கரில் அம்மாநில அரசு கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கால்நடை விவசாயிகளிடம் இருந்து பசு கோமியத்தை அரசே கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு லிட்டர் கோமியத்திற்கு ரூ.4 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கோமிய கொள்முதலால் கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.