திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2022 (16:26 IST)

ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: புதிய திட்டம்

charging
ரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: புதிய திட்டம்
இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் சென்டர் அமைக்கப்படும் என புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 
 
மின்சார வாகனங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது 
 
முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், கொல்கத்தா ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
 
வரும் 2025-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
Edited by Mahendran