வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (13:36 IST)

நிலவில் புது கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆர்பிட்டர்!!

நிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திரயான் 2 விண்கலம் உறுதிபடுத்தியுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் விக்ரம் லேண்டார், நிலவில் தரையிறங்குய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து இஸ்ரோ பல முறை விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தது. ஆனால் முடியவில்லை. விக்ரம் லேண்டர் செயல்படாவிட்டாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ் 2 என்ற கருவி உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 
 
இந்த ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக்கூடியது என்றும் பூமியில் அரிதாக காணபடும்  வாயுவில் ஆர்கான் 40தும் ஒன்று எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவ்ல் வெளியிட்டுள்ளனர்.