வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:07 IST)

சந்திரபாபு நாயுடு இருக்கும் சிறையில் டெங்கு பரவுகிறதா? மகன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் ஆனால் சிறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடுக்கப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் இருக்கும் ராஜமுந்திரி சிறையில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. 
இந்த சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்ததாகவும், சந்திரபாபு நாயுடுக்கும் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்துள்ளார். 
 
எனவே சந்திரபாபு நாயுடுவை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Edited by Mahendran