புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 ஜனவரி 2019 (11:01 IST)

போய்ரூங்க இல்ல ஃபினிஷ் பண்ணிருவேன்: பாஜகவினரை அலற விட்ட சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் பாஜகவுடன்ன் கூட்டணியில் இருந்து பின்னர் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தினால் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதன் பின்னர் மோடியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். 
 
சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காக்கிநாடா சென்றார். அப்போது அவரின் வாகந்த்தை வழிமறித்து பாஜகவினர் பிரச்சனை செய்தனர். அபோது பிரச்சனை ஏற்படுத்திய பாஜகவினரிடம் காட்டமாக பேசி அவர்களை அலற விட்டார். 
 
அவர் பேசியது பின்வருமாறு, ஆந்திர மாநிலத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள எந்தவித உரிமையும் இல்லை. இது போன்று பிரச்னை செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
 
உங்கள் தலைவர் நரேந்திர மோடி செய்ததை வெளியில் சொல்ல, நீங்கள் அவமானபட வேண்டும். அவர் இந்த மாநிலத்திற்கு என்ன செய்தார்? ஆந்திர மாநிலத்தையே பாழாக்கிவிட்டார். 
 
நான் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன், மரியாதையாக இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள் என கடுமையாக பேசினார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.