வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:39 IST)

சண்டிகர் மேயர் தேர்தல்: 8 ஓட்டுக்கள் செல்லாததால் பாஜக வேட்பாளர் வெற்றி..!

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் வாக்களித்த எட்டு ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் மனோஜ் சொன்கர் என்பவர் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு 12 ஓட்டுகள் இருந்த நிலையில் அதில் 8 ஓட்டுக்கள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் 16 ஓட்டுகள் பெற்ற பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். 
 
இந்த நிலையில் பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிட்டதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்தான் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று இருப்பார் என்றும் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் மேயர் தேர்தல் சரியாகத்தான் நடந்தது என்றும் இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
 
Edited by Siva